Tuesday, 15 November 2016

Archaeological Dept & HRCE - uncaringly destroy old inscriptions of glorious Chola heritage

Common not knowing the significance of historical places is understandable ~ every place you visit, you can see some persons writing ‘their address, place, qualification, their love and more ‘ – they spoil the pristine glory of the place and should be condemned…. – and , what would you say, if historic evidence is destroyed by mindless act (calling it renovation) by Archaeological Dept, – who are expected to protect  and HRCE (Hindu Religious and Charitable endowments Dept) who control the finances derived by temples !!!!  Sad is the state of affairs


****************
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி எனும் தலம் காவிரி மற்றும் பழவாறு ஆகிய நதிகளின் வடபுறம் அமைந்துள்ள கிராமம்.  ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் சீரோங்கும் பொழிற்கோடைத் திருலோக்கிய சுந்தரனேஎன அழைத்து பதினொரு  பாடல்களில் திரைலோக்கி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனைப் போற்றிப் பரவியுள்ளார். திரைலோக்கி என்றும் திரைலோக்கிய  மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், திரைலோக்கி என்னும் விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்றும் சோழப் பேரரசர்கள் காலத்தில்  அழைக்கப் பெற்ற இவ்வூர், தற்காலத்தில் திருலோக்கி என வழங்குகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும்  சாலையில் உள்ள இவ்வூரில் கயிலாசநாதர் திருக்கோயில் என்றும்  சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்பெறுகின்ற இரு சிவாலயங்கள்  உள்ளன.

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கியவர்கள்  சோழர்கள்.  நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'.  சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.    இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.  சோழர்ச தம் மலர் ஆத்தி.   மாமன்னன் இராசராசனிற்கு  பிறகு  இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன்.   ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இராசேந்திர சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான்.  சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்த வெற்றியைச் சிறப்பிக்க கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காகஇராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

நிற்க.  இது சரித்திர பதிவல்ல !  அற  நிலத்துறையும் தொல்லியல்துறையும் சேர்ந்து  ~ பணி சிறப்பு உணராமல் ஒரு அற்புத சரித்திர சான்றை தகர்த்த செய்தி.  [கீழே தினமலர் இன்றைய செய்தி 15.11.2016 அப்படியே மறுபதிவு]

முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, ஒரே தமிழ் மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கைநீரை சுமந்து வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலைய துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். இது, வரலாற்று ஆர்வலர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அங்கு கள ஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் கோமகன் கூறியதாவது: சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை நீரை கொண்டு வந்து, இக்கோவில் இறைவனை வணங்கிய பின், கங்கைகொண்ட சோழபுரம் சென்றான். இது, அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு முக்கிய வரலாற்று சான்று; அது சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுளம்ப நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரிஷபானந்தர் மற்றும் ரதிமன்மதன் சிலைகளை, வெற்றி சின்னங்களாக இக்கோவிலுக்கு வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது. அவையும், தற்போது வண்ணம் அடித்து, சிதைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பழமையான கல்வெட்டுகள், புராதன சின்னங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அவை, கடந்த கால ஆவணங்கள். அவற்றை அழகுபடுத்துவதாக எண்ணி, வண்ணம் பூசுவதால், அவற்றின் மதிப்பு குறைவதோடு, எழுத்துக்களை படிக்க முடியாமலும் போய்விடும். திருலோக்கி கைலாசநாதர் கோவில், அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், திருப்பனந்தாள் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மடம், இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை.இவ்வாறு நடைபெறாமல் இருக்கவே, தமிழக தொல்லியல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பயிற்சி அளிக்கிறது. ஆனாலும், வரலாறுகள் அழிக்கப்படுவது வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tuesday, 6 September 2016

Kolkata will take a century to recover from Mother Teresa

Teresa's canonisation has reignited criticism of her methods and her order, which detractors claim focused on the elevation, rather than the relief, of suffering.
Critics say "grossly inadequate medical care was given to the sick and dying, syringes were reused without sterilisation, pain relief was non-existent or negligible and conditions were unhygienic", reports The Guardian.   On papal orders, 1,500 homeless people were brought to Rome overnight on buses from around Italy to be given seats of honour at the canonisation of Mother Teresa, revered around the world for her work with the destitute and dying.

Kolkata will take a century to recover from Mother Teresa
By IANS | Sep 03, 2016, 09.44 AM IST


If Mother Teresa, to be canonised at the Vatican on September 4, is to be named a patron saint of anything it should be for "misinformation". In the last 20 years of her life, truth became an unknown entity to her. The media aided and abetted her lack of integrity and in a way she cannot be blamed for believing in her own lies.

Intellect was not her strong point and, for someone like her, to be surrounded by hordes of sycophants who were telling her if she said black was white then that had to be true, it became intoxicating. The media did spread the mega-myth about her, but she herself was the source. She repeatedly told the world she went around the city 24x7 "picking up" destitute from its squalid "gutters" (she did not), that she fed up to 9,000 in her soup kitchens (she did not), she never refused a helpless child (she did as a rule), that the dying destitute in her so-called home for the dying Nirmal Hriday died a "beautiful death" (they were treated harshly and often died a miserable, painful death).

Mother Teresa was an ultimate politician who worked on behalf of the Vatican. No, she was not an "agent" as that would be conspiratorial. She did not have to do much subterfuge or skulduggery in India itself, as Indians, particularly the media, were in awe of her and connived with her.

When she said in her Nobel speech that she created 61,237 fewer children from (slum) couples abstaining from sex, no one challenged her on her bogus and fantastic figure; neither did they ask her how at the height of the Cold War abortion could be the "greatest destroyer of peace" (said a thousand times, including in her Nobel speech).

I do not blame world media as much as I blame Indian and particularly Kolkata media. Here she was, a jet-setting celebrity -- although appended with the epithet "of Calcutta" -- spending six to nine months in a year in Europe and the US, making strange claims about her work and about the disgusting state of the city, but never to be seen in the city's disasters -- major or minor.

Why was she not asked why she re-used needles on her residents in Nirmal Hriday (it was official policy) when she herself received the finest care in the world's best hospitals?

Even after her death, the Indian fear of blue-bordered saris continues. On August 1, 2005, UK TV showed a child tied to a cot overnight in her orphanage -- one Kolkata newspaper grudgingly reported the matter with lots of "alleged". During her lifetime, even that would be unthinkable. She was white, she hobnobbed with President Ronald Reagan (they were closest of buddies), and oh yes, she had the Nobel -- so she had to be divine.

Did no one know that she hobnobbed with the Duvaliers of Haiti whose brutality was unsurpassed (whose opponents were often cut up and fed to dogs)? No one in India wanted to know. For the Western media, she was a metaphor, a set-piece, a stratospheric certainty of image in an uncertain and changing world. Conversely, Kolkata was the opposite metaphor of absolute degradation where "foetuses are given to dogs to eat" (as remarked by her "other self" Francis Goree).

It was beyond the West's interest, energy or remit to robustly challenge these wrong stereotypes. But did Indian journalists not know that her main bank was the Vatican Bank, a dark cavern of corruption, intrigue and murder? Before she died, it was well known that she had accepted millions from Charles Keating, the notorious American swindler, but no one in India cared.

Bengalis showed some rare guts when she was beatified through a "miracle" in 2003. Doctors, and even the then Health Minister, made statements that Monica Besra was cured by prolonged treatment, and not by an aluminium medal. Even Besra herself periodically said her cure was not a miracle. But the Vatican treated Indian opinion with the contempt it always has and proceeded with canonisation.

But what is so great about Catholic saints? People should realise a Catholic saint does not have to be saintly or nice in the secular sense, but has to be pure to Catholic dogma, especially on contraception and abortion. Jose Maria Escriva, a Fascist, is a Catholic saint; another Fascist, Cardinal Stepinac, is a "blessed". "Saint" John Paul II actively shielded the prolific paedophile and criminal Marcial Maciel over many years. Mother Teresa also wrote a letter of support for a convicted paedophile priest Donald McGuire, asking people to overlook his "imprudence".

If one looks around Mother Teresa's homes in Kolkata today, one would find many of them acceptable. But one must not forget that this comes after 25 years of campaigning by me, and also persistent global criticism from Hemley Gonzalez, the American former volunteer who in 2008 was so utterly disgusted by what he saw that he founded the Stop the Missionaries of Charity movement and founded his own Responsible Charity. Moreover, in the last six months the order has spruced up a great deal, preparing for the canonisation on Sunday.

And yet, like obliging picaninnies, the Indian government is dutifully sending a delegation to the black-magic ceremony in Rome. (Hindus please note: the Pope is not allowed to wish Hindus personally even on Diwali.)

Be that as it may, my own wish would be to reclaim Kolkata/Calcutta from Teresa -- to sever the automatic connection of the two names as the whole wide world sees it. Kolkata's image under the yoke of Mother Teresa will take a century to recover. In the last 50 years, the city has lost an unimaginable amount from the loss of international business and tourism and will continue to do so. But let us at least loudly, proudly proclaim that we have nothing to do with a medieval creature of darkness -- not any more.

(Aroup Chatterjee, who describes himself as a "militant atheist", is the Britain-based author of "Mother Teresa - The untold Story", an updated version of which was released in Kolkata in June. The views expressed are personal)




Sunday, 4 September 2016

Celebrating Vinayaka Chathurthi 2016 : கைத்தல நிறைகனி ...

Today 5th Sept is Ganesh Chaturthi…. Vinayaka Chathurthi is  celebrated grandly in Tamilnadu as also in the rest of the country with gay and gaiety.  Lord Ganesha is widely worshipped as the God of wisdom, prosperity and good fortune and traditionally invoked at the beginning of any new venture or at the start of travel.

In mid 1980s, installing huge Vinayaka idols in many public places, religious worship for ten days and visarjanam were being conducted in a big manner ~ after a couple of incidents, the then rulers banned passing of procession in the Triplicane High Road citing law and order issues and now a days, the procession has shrunk ……. Those days, there would be hundreds of Vinayakas big and small installed at each street and the idol procession would unwind through narrow lanes of triplicane, with enthusiastic crowds singing bajans and songs extolling Ganesha.

Now there is so much of pressure on Hindu devotees – they are made to run for obtaining permission as Police, Corporaation and every authority does their mite to dampen the spirit.

Here are some morning photos at Triplicane, traders getting ready waiting for the devotees to come and take home Vinayaka made of clay ~ and this Vyasa Baratha Vinayaka was a great attraction in the streets of Triplicane yesterday evening.


கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய
கரிமுகன் அடிபேணி ...
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,
... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

Hail  Lord Ganesha


Vinayakane vinai theerppavane… !!!  Jai Ganapathi Maharaj ki…. !!!!!









****************






Monday, 8 August 2016

திருவல்லிக்கேணி எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவில்

எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவில்  திருவல்லிக்கேணி


கல்விக்கூடங்கள் நிறைந்த திருவல்லிக்கேணி, தேசிய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.  இது ஒரு புண்ணிய பூமி. திருவல்லிக்கேணியில் பல்வேறு சிறிய தெருக்களில் பெரிய கோவில்கள் அமைந்து உள்ளன.

ஒவ்வொரு ஊரையும் காப்பது "எல்லை அம்மன்".  திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி கோயில். இது  300 ஆண்டுகள்  தொன்மை வாய்ந்தது.  நெசவுத் தொழில் செய்து வந்த செங்குந்தர்கள்அஸ்திவாரத்திற்காக நிலத்தை தோண்டும்  போது, அதில் அம்மன் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. குமரனை குல தெய்வமாக கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் கண்டெடுத்த அம்மன்  சிலையை கோவிலில் வைத்து கொண்டாடினார்கள்.

ஜாம்பஜாரில் இருந்தும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்தும் இக்கோவிலுக்கு செல்லலாம். திருக்கோவில் உள்ளே  சிறிய  விமானத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் ரேணுகா பரமேஸ்வரி அம்மன். கோயிலின் இடதுபுறம் விநாயகர் காட்சியளிக்கிறார். இதையடுத்து  வெளிப்பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, 108 பால்குட அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  ஆனி மாதம் பவுர்மணி தினத்தன்று பூச்சொரிதல் விழா, ஆடி மாதம் பிரமோற்சவ திருவிழா மற்றும் கூழ்வார்த்தல் நடைபெறும். இதுதவிர சிவராத்திரி திருவிழா, மாசி மக உற்சவ விழா நடைபெறும்.

இந்த அம்மனை வேண்டினால் தீராத நோய் தீரும், வாழ்வில் வளம் பெருகும், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  சமீபத்தில் அம்மன் திருவீதி உலா கண்டு அருளிய பொது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே.  கடைசி படம் - அம்மன் மாசி மகத்தன்று வங்க கடலுக்கு  எழுந்து அருளும்போது எடுக்கப்பட்டது.

அன்புடன் : அல்லிக்கேணி மைந்தன்.

8th Aug 2016.









Sunday, 7 August 2016

Aadi masam ~ Amman Kovil Thiruvizha : தீமிதியும் இயற்பியல் விதியும் - அறிவியலுக்கு அப்பால்**

‘Aadi’ is a special month ~ in every Hindu temple, especially, Amman thirukovil – thousands would descend worshipping the God and Goddess with ritualistic offerings.

Of the many – piercing body [alagu] and walking on fire [தீமிதி] are very difficult and tough, yet, devotees consummate pain, forgetting everything in their unstinted faith to the God.  In many parts of South India, Theemithi [kundam; poo chorithal; firewalking] occurs as propitiation to the Lord atoning sins.  The so called rationalists would try to criticise only Hindu rituals, keeping totally shut on the practices of other religions.

It is the faith, that is above everything ~ and many times it defies Science and logic too.   Here is one very interesting article of Dinamani, written by Justice Thiru V. Ramasubramanian, reproduced as it is : [and down below excerpts from another article from National Geographic]

தீமிதியும் இயற்பியல் விதியும் - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்
First Published : 05 August 2016 : அறிவியலுக்கு அப்பால்**

ஆடி மாதத்தில் ஊரெங்கும் அம்மன் கோயில்களில் திருவிழாக்களும், திருவிழாக்களின் தொடர்பாகத் தீமிதி நிகழ்ச்சியும் நடைபெறுவதைக் காண்கிறோம். கடும் வெப்பத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புத் துண்டங்களின்மேல் எப்படிப் பலரால் நடந்து போக முடிகிறது என்பதைப் பல விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். அவர்களுள் முதன்மையானவர் திரு. ஹேரி ப்ரைஸ் (Harry Price).

1881-இல் இங்கிலாந்தில் பிறந்த ஹேரி ப்ரைஸ், ஒரு மனோசக்தி ஆராய்ச்சியாளர் (psychic researcher). அவர் எழுதிய நூல் ""ஆவிகளை வேட்டையாடிய ஒருவரின் வாக்குமூலங்கள்'' (Confessions of a Ghost Hunter). உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் தீமிதித் திருவிழாக்களைக் கூர்ந்து கவனித்த திரு. ஹேரி ப்ரைஸ், ""தி டைம்ஸ்'' பத்திரிகையில் 1935-ஆம் ஆண்டில் இலண்டன் மனோசக்தி புலனாய்வுக்குழுப் பல்கலைக் கழகத்தின் (University of London Council for Psychical Investigation) சார்பில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். பரிசோதனை ரீதியில் தீமிதி நடத்திக் காட்டத் தயாராக இருப்பவர்களிடமிருந்து அந்தப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. அப்போதுதான் குடாபக் என்னும் ஒரு காஷ்மீரி, இலண்டன் நகருக்கு வந்து சேர்ந்தார். தீமிதி நடத்திக்காட்ட குடா பக் அவர்கள் இணங்கிய பிறகு, அவருடைய உடலைப் பரிசோதிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இலண்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த புனித பார்த்தோலூமியோ மருத்துவமனைக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்த திரு. ஃப்ராங்க் ஹாப்வுட் (Frank Hopwood) என்பவர், குடா பக் அவர்களின் பாதங்களை ஊடுகதிர் நிழற்படம் (X-Ray) எடுக்கலாம் என்றும், அதன் மூலம் அவருடைய பாதங்களில் ஏதாவது ஒரு கனிம உப்போ (metallic salt) அல்லது சோடியத்தை விட அதிகக் கனமுள்ள ஏதோ ஒரு பொருளோ தடவப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறினார்.

மாற்றாக, குடா பக் அவர்களின் பாதங்களுக்கு அருகில் ஒரு குளிர்விக்கப்பட்ட கண்ணாடியை வைப்பதன்மூலம் அவருடைய பாதங்களில் விரைந்து ஆவியாகக் கூடிய திரவம் (volatile liquid) தடவப்பட்டு, அதன்மூலம் அவருடைய பாதங்களுக்கு அடியில் வெப்பக் காப்பிட்டுப் படிமம் (heat insulating layer) உருவாகி இருந்தால் அதைக் கண்டுபிடித்து விடலாம் என்று யோசிக்கப்பட்டது. இன்னொரு ஆலோசனை, பூக்குழிக்குள் (தீக்குழி) எரியும் தணலின்மேல் படர்ந்து இருக்கும் சாம்பல், ஒரு மனிதனின் பாதத்திற்கும் நெருப்புக்கும் இடையே ஒரு காப்பாக (insulator) இருக்கக்கூடும் என்பதால் ஒரு வெப்பமானியைக் கொண்டு அந்தச் சாம்பலின் வெப்பம் கடத்தும் திறனைக் (thermal conductivity) கண்டறியலாம் என்பதாகும்.

இந்த ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்ட திரு.ஹேரி ப்ரைஸ் தன்னுடைய நண்பராகிய திரு. அலெக்ஸ் ட்ரிவ்பெல் (Alex Drivbell) அவர்களின் வீட்டில் ஒரு தீக்குழியை உருவாக்கி, அதில் ஓக் மரக்கட்டைகள், மரக்கரி, நிலக்கரி, பாரஃபின் மெழுகு ஆகியவற்றைப் போட்டு 1935-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் நாள் தீமிதிக்கு ஏற்பாடு செய்தார். சரியாகக் காலை 11.20 மணிக்கு அந்தக் குழியில் தீ மூட்டப்பட்டது. தீப்பிழம்புகளும், புகையும் அடங்கித் தணதணக்கும் அனலாக அந்தக் குழி மாறியதும், அந்தக் குழியின் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. அந்தத் தீக்குழிக்கு அருகில் நின்றிருந்த பணியாளர்கள், வெப்பம் தாங்காமல் மரப் பலகைகளால் தங்கள் முகங்களை மூடிக் கொண்டனர். தீக்குழியை அருகிலிருந்து படமெடுக்க விரும்பிய திரு.ஹேரி ப்ரைஸ், அக்குழியின் அருகே போக முடியாமல் திணறினார்.
இந்தப் பரிசோதனையைக் காண்பதற்கு, தி லிஸனர் (The Listener) பத்திரிகையின் ஆசிரியராகிய திரு.லாம்பர்ட், புனித பார்த்தோலோமியோ மருத்துவமனை இதழின் ஆசிரியராகிய திரு.டிக்பி மொய்னாக் (Digby Moinagh), ஆக்ஸ்ஃபோர்ட் மருத்துவராகிய திரு.வில்லியம் கால்லியர் (William Collier), மருந்தியல் நிபுணர் பேராசிரியர் திரு.குன் (Gunn) ஆகியோரும், இன்னும் பிற பலரும் வந்திருந்தனர். தீக்குழியில் இறங்குவதற்கு முன் குடா பக் அவர்களின் பாதங்களை மருத்துவர் திரு.கால்லியர் அவர்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் சல்லடைத் துணிகளால் (swabs) பலமுறை துடைத்து, அந்தத் துணிகளை, ஒரு நோய்க் குறியியல் வல்லுனரிடம் (Pathologist) ஒப்படைத்தார். அவற்றைப் பரிசோதித்த அந்த நிபுணர், அவற்றில் எந்த வகையான உயிர்ப் பொருள்களோ (organic) அல்லது உயிரற்ற பொருள்களோ (inorganic) தென்படவில்லை என்று உறுதி அளித்தார்.

தீக்குழியில் இறங்குவதற்குமுன் ஒரு சிறிய விசிறியைக் கொண்டு குடாபக் அவர்கள் தீக்குழியில் மேலே படர்ந்து இருந்த சாம்பலை விலக்கினார். அப்படிச் செய்ததன்மூலம் தன்னுடையப் பாதத்திற்கும், நெருப்புத் துண்டுக்கும் இடையில் ஒரு காப்பிட்டுப் படிமமாக (insulating layer) அந்தச் சாம்பல் இல்லை என்பதை அங்கு வந்த அறிவியலாளர்களுக்கு உறுதி செய்தார். அதன்பின், அந்தத் தீக்குழியில் நான்கு முறை குடா பக் அவர்கள் நடந்து சென்றார். அவர் வெளியே வந்த பிறகு, அவருடைய பாதங்கள் பரிசோதிக்கப்பட்டுப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. நெருப்புத் துண்டுகளால் அந்தப் பாதங்களில் எந்தவிதக் காயத்தையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த முடியவில்லை என்பதைப் பார்த்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சியுற்றனர். உடனே திரு.டிக்பி மொய்னாக் அந்தத் தீக்குழிக்குள் தான் நடந்து பார்ப்பதாகச் சொல்லி தன்னுடைய காலணிகளையும், காலுறைகளையும் நீக்கிவிட்டு, வெறிபிடித்தவர் போல் அந்தத் தீக்குழிக்குள் காலை வைத்தார். ஆனால் இரண்டு வினாடிகளுக்குள் ஆவென்று அலறிக் கொண்டு தீக்குழியிலிருந்து வெளியே தாவிக் குதித்தார். சிறிது நேரம் உணர்ச்சியற்று இருந்த அவருடைய பாதங்களில் முப்பது நிமிடங்களுக்குள் கொப்புளங்கள் தோன்றின. அங்கு வந்திருந்த யாராலும் குடா பக்கின் தீமிதித் திறனுக்கு அறிவியல் ரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை.

1935-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் குடாபக் அவர்களைக் கொண்டு இரண்டாவது பரிசோதனை அதே இடத்தில் நடத்தப்பட்டது. முதல்முறை தயாரிக்கப்பட்ட தீக்குழியை விட இன்னும் பெரியதாகவும், அதிக வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் ஒரு தீக்குழி இம்முறை தயாராகியது. தீயில் இறங்குவதற்கு முன்னால், குடா பக் அவர்களின் பாதங்களை புனித மேரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநராகிய பேராசிரியர் திரு.பான்னெட் (Pannett) பரிசோதித்தார். ஒரு தோல் வெப்பமானியின் மூலம் அந்தப் பாதங்கள் ஆராயப்பட்டபோது, அவற்றின் வெப்பம் 93.2 ஃபாரன்ஹீட் ஆக இருந்தது. அதன்பின்னர், அவருடைய பாதங்கள் கழுவப்பட்டு அவை உலர்ந்தபின் ஒரு சிறு துத்தநாக உயிரகம் கலந்த மருந்திட்டத் துணி (zinc oxide plaster) அவருடைய பாதத்தில் ஒட்டப்பட்டது. சரியாக மாலை 3.14 மணிக்கு குடா பக்  தீக்குழியில் இறங்கி நடந்தார். நிதானமாகவும், உறுதியுடனும் அவர் தீக்குழியில் நடந்து வெளியே வந்தபின், அவருடைய பாதங்களை பேராசிரியர் திரு.பான்னெட் மறுபடியும் பரிசோதித்தார். அப்பொழுது, அதன் வெப்பம் 93 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகக் (முன்னிருந்ததை விடக் குறைவாக) காணப்பட்டது. அவற்றில் எந்தக் காயமும் இல்லை. உடனே, அங்கிருந்த இயற்பியல் அறிஞர்கள் தீக்குழியின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தின் அளவை வெப்பமானிகளைக் கொண்டு சோதித்தபோது, அதனுடைய அளவு 430 டிகிரி சென்டி கிரேட் என்று கண்டு பிடித்தனர்.

இந்தத் தீமிதி நிகழ்ச்சியைப் பற்றிப் பலரிடம் விவாதித்த பின்னர் தீமிதிப்பவர்களுடைய உடல் சக்திக்கும் மனோ சக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதென்றும், தீமிதிப்பவர்கள் தீமிதிக்கு முன்னால் தங்களை ஒரு மனோ வசியத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் திரு.ஹேரி ப்ரைஸ் முடிவுக்கு வந்தார். இங்கிலாந்தில் திரு.ஹேரி ப்ரைஸ் அவர்கள் நடத்திக் காட்டிய இந்த ஆய்வுகளுக்கு வெகு நாட்களுக்குப் பின்னால் அமெரிக்காவில் பிட் ஜான்ஸ்டான் (Pitt-Johnstown) கல்விக் கூடத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றும் பேராசிரியர் திரு.டேவிட் வில்லி (David Willey) என்பவர் தன்னுடைய மாணாக்கர்களுக்காக 1998-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் நாள் ஒரு தீமிதியை நடத்திக் காட்டினார். அது, பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தால் (BBC) டிஸ்கவரி (Discovery) தொலைக் காட்சிக்காகப் படமாக்கப்பட்டது. தீமிதியில் அறிவியலைத் தாண்டிய அற்புதம் எதுவும் இல்லை என்று சொல்ல வந்த பேராசிரியர் திரு. டேவிட் வில்லி அவர்கள், மூன்று காரணங்களை முன்வைத்தார். ஒன்று, மரக்கட்டைக்கு வெப்பத்தைக் கடத்தும் திறன் மிகக்குறைவு என்பதால் தீமிதிப்பவர்கள் வேறு எந்தப் பொருளையும் விட மரக்கட்டைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது. இரண்டாவது, எரியும் நெருப்புத் துண்டுகளின்மேல் படர்ந்து இருக்கும் சாம்பல், நெருப்பிற்கும் பாதத்திற்கும் இடையில் ஒரு பாதுகாப்பு வளையமாக அமைந்து விடுகிறது என்பது. மூன்றாவது, தீமிதிப்பவர்களின் வேகமான நடை, கால் மாற்றும் முறை மற்றும் அவர்களின் பாதங்களில் ஏற்கெனவே இறந்துபோன தோலின் படிமம் தரும் பாதுகாப்பு ஆகியவைதான் இதை நிகழ்த்துகிறது என்பதாகும்.

ஆனால், பேராசிரியர் திரு.டேவிட் வில்லி அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் திரு.ஹேரி ப்ரைஸ் அவர்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு விட்டன என்பதாலும், தனது பரிசோதனைக் களத்தை அவர் விரிவு படுத்தவில்லை என்றும் அவர்மேல் குற்றச் சாட்டுக்கள் உண்டு. அப்படியானால், உண்மையில் தீ மிதிக்கும் நபரின் பாதங்களைப் பாதுகாப்பது எது?


Why Fire Walking Doesn't Burn: Science or Spirituality? :  John Roach
National Geographic News : September 1, 2005

Each May in some northern Greek villages revellers walk barefoot across a bed of burning wood coals as part of a three-day celebration in honor of Saint Constantine and Saint Helen. "They believe that the power of Saint Constantine—the religious power—allows them to do it and that that is a miracle," said Loring Danforth, an anthropologist at Bates College in Lewiston, Maine.

The festival is just one of the many events around the world in which people walk across a fire pit without getting burned. Danforth has extensively studied fire-walking rituals, including the event in northern Greece and the more recently established fire-walking movement in the U.S. As interest in fire walking has grown, he said, scientists have attempted to demystify the phenomenon and tease apart the allure of the ritual. But no amount of debunking can take away from the empowerment a fire walker can feel, Danforth says.

Fire-Walking Theories : David Willey is a physics instructor and an expert on the science of fire walking at the University of Pittsburgh in Pennsylvania. He said people are able to walk across a bed of burning coals because "wood is a lousy conductor." "There're three ways heat can get transmitted: conduction, convection, and radiation," he said.

Conduction is the transfer of heat from one substance to another via direct contact. In convection heat is transferred through air or fluid circulation. In radiation it is transmitted as if spreading out in straight lines from a central source (think of the sun or a heat lamp). Conduction is the main way heat is transmitted to a person's feet during a fire walk. In fire walking, a person's feet, which Willey said are also poor conductors, touch ash-covered coals. Since the fire walker is indeed walking, the time of contact between feet and coals is minimal—too quick for the coals to burn or char the feet, Willey said.

According to Burkan, the basic physical principle behind fire walking is the same that allows an egg to boil in a paper cup when placed atop red-hot coals. The boiling water keeps the cup at 212 degrees Fahrenheit (100 degrees Celsius)—hundreds of degrees cooler than paper's burning point. Burkan says that circulating blood likewise keeps the flesh on a fire walker's feet from reaching its burning point—as long as the walker is relaxed enough to allow strong blood flow and as long as the walker keeps walking. "What controls [the ability to fire walk] is more than physics, it's your state of mind," Burkan said.

Nothing could however debunk or put Science in to arguments.  Willey, the Pittsburgh physicist, said such mind over matter theories have nothing to do with why fire walking is physically possible. He allows, though, that self-confidence is required to take that first step. "You've got to believe you're going to be OK, otherwise you wouldn't do it," he said. "But what your mind-set is has got absolutely nothing to do with whether you're going to burn or not."
Danforth, the Bates College anthropologist, said that scientific explanations do not "debunk or diminish or invalidate the value of the ritual." "[Fire walking] can have the power to affirm one's life. It can change lives, give confidence, all kinds of things," he said.