Sunday, 7 July 2013

HR&CE bans laying of granite in temples.... what happened in Sri Parthasarathi Swami temple ????

A few months back, the decision of  Temple authorities saddened the ardent devotees.   There were  continuing protests at Thiruvallkeni at the puranic Sri Parthasarathi Swami Temple, a divyadesam sung by 3 Azhwars.  The authorities  placed black granite in the inner prakaram over the black stone, which became  a hindrance with devotees finding it too hot to step on and too slippery when it rains.  Not caring for the aesthetic design nor for the time-old traditions, the authorities  erected structure covering the place fully, which prevented the devotees from having darshan of the Sacred Vimana. There  were loud protests and signature campaign, procession and more.

The residents of Triplicanes and the devotees who throng the sacred Temple expressed  their pain and anguish in peaceful democratic protests ~ nothing fell in the ear of authorities.  Janata Party leader Sri Subramaniya Swami too visited the temple lending his support.   As the peaceful efforts failed,  a section of devotees filed a petition before the Hon’ble court.


The authorities stated in the Court that what was constructed was a semi-permanent structure and with the powers that be the petition was dismissed much to the anguish of everyone.

Today it is reported in Dinamalar that HR &CE has banned affixing granite slabs inside the temples under its administration……. Does this not amount tacit acceptance of what they did in Thiruvallikkeni Sri Parthasarathi Swami Temple was wrong ?????


கோவில்களில் வழவழப்பான கிரானைட் பதிக்க தடை
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,00:35 IST

கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்கள், மழை காலங்களில், வழுக்கி விழுவதை தவிர்க்க, கோவில்களில், வழவழப்பான கிரானைட் கற்களை பதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களின் வருமானம் மற்றும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, அடிப்படை வசதி உள்ளிட்டவற்றில், பல மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும்பாலான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கோவில்களின், தரை தளம் பல ஆண்டு பழமை வாய்ந்தவை. கோவில் நிர்வாகம் சார்பில், அடிக்கடி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். கிரானைட் வருகைக்கு பிறகு, பெரும்பாலான கோவில் களில், கட்டுமான பணிகளில், அதிகளவு கிரானைட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரானைட் கற்களை எளிதில் துடைத்து சுத்தம் செய்து விட முடியும் என்பதால், கோவிலின் உட்பிரகாரத்துக்குள் நுழையும் வழித்தடம் முதல், பக்தர்கள் வலம் வரும் உட்பிரகாரம் வரை, அனைத்தும், கிரானைட் மயமாகி வருகிறது. வயதான மற்றும் பெற்றோருடன் கோவிலுக்கு வரும் குழந்தைகள், அடிக்கடி வழவழப்பான கிரானைட் கற்களில் கீழே விழுந்து விடுகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில், உட்பிரகாரத்தில் வலம் வரும்போது, பக்தர்கள் கீழே விழுந்து, கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கோவில்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "கிரானைட் கற்கள் மீது நடந்து வரும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள், அடிக்கடி கீழே விழுந்து விடுகின்றனர். வரும் காலங்களில், கோவில் கட்டுமான பணிகளில், கோவில் உட்பிரகாரத்தில், வழவழப்பான கிரானைட் கற்களை பதிப்பதற்கு பதிலாக, வழவழப்பு குறைந்த, சொர சொரப்பான கிரானைட் கற்களை பதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment