Friday, 20 January 2017

Ekkadu Thiruvural Uthsavam ~ would Perumal stop to honour idol smuggler

Of the various Uthasvams at Thiruvallikkeni Sri Parthasarathi Swami temple, one interesting Uthsavam is Ekkattuthangal Thiruvural Uthsavam.  This is not entirely religious – unconnected with Azhwar or Acharyars – but a Uthsavam happening for many decades, when Sri Parthasarathy Swami leaves Temple early morning, travels through Mylapore, TNagar, Mahalingapuram to Ekkadu – visits His place on the banks of Adyaru, has Thirumanjanam and returns after halt at Saidapet.

During this purappadu on a pallakku, Perumal stops (mandagappadi) at various places that include temples at Mylapore, Saidapet and at private places, including School and a hotel. Here is something that has appeared in Dinamalar of date questioning the wisdom of stopping to provide maryathai to a person engaged in illegal trade of idols.

Sad is the way of HRCE authorities !!!!!

ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவத்தின்போது, சிலை கடத்தல்காரன் தீனதயாளனுக்கு, கோவில் மரியாதை செய்ய, அறநிலையத்துறையைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பது, சேவார்த்திகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், திருவூறல் உற்சவம் நடத்தப்படுகிறது. இதன்படி, உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் திருவல்லிக்கேணியில் இருந்து புறப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள பேயாழ்வார், பார்த்தசாரதி சுவாமியை எதிர்கொண்டு, மங்களாசாசனம் செய்வார். இதையடுத்து, தேனாம்பேட்டை, தி.நகர், மாம்பலம் வழியாக, ஈக்காட்டுத்தாங்கலை அடைந்து, அங்குள்ள தன் சொத்துகளை பார்வையிட்டு, ஆற்றங்கரையில் திருவூறல் உற்சவம் நடத்தப்படும். பின், அங்கிருந்து பறப்பட்டு கோவில் திரும்புவார்.

உற்சவர் செல்லும் வழியில் முக்கியஸ்தர், சேவார்த்திகள் சிலருக்கு, மண்டகப்படி எனும் கோவில் மரியாதை செய்வது வழக்கம். இதில், பிரபல சிலை கடத்தல்காரன் தீனதயாளனும் ஒருவர். கடந்த ஆண்டு, சிலை கடத்தல் வழக்கில் சிக்கி, அவன் சிறையில் அடைக்கப்பட்டான். இந்தாண்டு, திருவூறல் உற்சவம், நாளை நடக்கிறது. அன்று, தீனதயாளனுக்கு மண்டகப்படி செய்யக் கூடாது என, கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில், இது குறித்த பேச்சு நடந்தது. இதில், 'தீனதயாளனுக்கு மண்டகப்படி செய்ய வேண்டும்' என, சிலர் குரல் கொடுத்தனர்.; இது, சேவார்த்திகளிடம் கடும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து, சேவார்த்திகள் தரப்பில் கூறியதாவது: பாரம்பரிய கோவில்களில் உள்ள சிலைகளை கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட தீனதயாளன் வீட்டின் முன், உற்சவர் ஊர்வலம் நின்று, மரியாதை செய்ய வேண்டும் என, கோவில் நிர்வாகி ஒருவரும், சிலரும் அடம்பிடித்து வருகின்றனர். இந்த மண்டகப்படியால், அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்பதால், இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே, மண்டகப்படியால் பெரும் தொகை கிடைப்பதால், சுவாமி ஊர்வலம், பல நுாற்றாண்டுகளாக சென்ற வழித்தடம் மாற்றப்பட்டு, மகாலிங்கபுரம் சென்று சுற்றி வருகிறது. பணத்திற்காக, சுவாமி புறப்பாடு ஊர்வலத்தை, தங்கள் இழுப்பிற்கு மாற்றிக் கொள்கின்றனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலை கடத்தல்காரன் வீட்டின் முன், சுவாமி ஊர்வலம் நிறுத்தி, மரியாதை அளித்தால், அறநிலையத்துறையை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

- நமது சிறப்பு நிருபர்