The photo says it all ~ Siruvanchur Thiruvaleeswarar
Thirukoil in dire straits …. Will HR&CE do something !!!
சிறுவஞ்சூர்: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு
இல்லாததால், பழமை வாய்ந்த சிறுவஞ்சூர்
திருவாலீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் சிறுவஞ்சூர் கிராமத்தில்,
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலின் கருவறை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக,
10 ஏக்கர் நிலங்களும் உள்ளன. அவ்வாறு இருப்பினும் இக்கோவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு
மேலாக பராமரிப்பு இன்றியும்; பூஜைகளின்றியும் சீரழிந்து காணப்படுகிறது. இதை கண்காணித்து
சீரமைக்க வேண்டிய, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'கோவில் நிலத்தில் கிடைக்கும்
வருவாய் மூலம் கோவிலை சீரமைத்தால் போதும். இதை எந்த கோவில் நிர்வாக அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை'
என்றனர்.
நன்றி தினமலர் நாளிதழ் : http://www.dinamalar.com/district_detail.asp?id=1170889